Sunday, 18 February 2024

நலன்விரும்பி ... 🧜‍♂️

 மங்கையவள் நாணுகிறாள்  !

மணக்கோலம் பூணுகிறாள்  !

அன்பன் எண்ணி மனம் கோணுகிறாள் !

உங்கள் இரு மனங்கள்  நலம் வாழ  💑

உந்தன் புன்னகையை பரிசாக எதிர்நோக்கும்... 🥰

என்றும் உன் நலன்விரும்பி... 

Friday, 25 September 2020

சொல்லமறந்த கதை

யாரோவாகி போனேனோ
கண்ணெதிரே கண்டபோதும் 
கரையமல் சென்றாயோ
எதிர்பாரா சந்திப்பும் ஏமாற்றம் ஆனதோ 
பாதையோர பயணியென பாராமல் போனாயோ...
கனபொழுதில் கண்மறைந்த காவியமே
பேசத்தான் என்னிடத்தில் வார்த்தையிலை
எல்லாமே வெறுமையாய் நான் நிற்கையிலே..!
    

Saturday, 9 May 2020

எதிர்பார்ப்பு


ஏரையேனும் எதிர்பார்த்து
நின்றால்
கடைசியில் மிஞ்சுவது
ஏமாற்றம் ஒன்றே..!
சந்தர்பங்களும் சூழ்நிலைகளும் அனைவருக்கும் ஒன்றானதே !!
இருப்பினும்
எதிர்பார்பை உருவாக்கி
ஏமாற்றத்தை பரிசளிக்
காத்துள்ளார்கள் - நம் "நம்பிக்கைக்குரியவர்கள்"..!

Wednesday, 29 April 2020

வா மழையே வா

வா மழையே வா
        வா மழையே வா

           " செடி கொடிகள் பசியாற "

                   வா மழையே வா
                           வா மழையே வா...

                              🌧🌧🌱🌧🌧

Sunday, 26 April 2020

மழைச்சாரல்

உன் வெள்ளி பரிசம் பட்டு
சில்லென்று சிலிர்கிறது தேகம்
சிறகடித்து பறக்கிறது
பட்டாம்பூச்சியாய் உள்ளம்
நிரைதேடி ஓடும் வேரைப்போல
மண்ணை தேடிய மழைச்சாரல்!!!.

Saturday, 25 April 2020

மழை

அந்தி கருத்துருச்சி  🌫
மழைக்காற்று ஆர்பாட்டம் ஆக்கிடுச்சி 🌬
ஆகாசம் அழுதுருச்சி  ⛈
வறண்ட பூமி குளிர்ந்திருச்சி  🌱
இந்த பாவி மரங்கள் மகிழ்ந்திருச்சி 🌳
புன்னகையில் பூத்துருச்சி 🌷
பூகோளம் ஆக்கிடுச்சி.! 🏝🌏🏞
( 🌧 கோடை மழை 🌧 )

Thursday, 9 April 2020

கோடை மழை..

கார் முகில் கூட,
இளந்தென்றல் விச,
மனமெங்கும் உன் ஞாபகம்,
ஊரெங்கும்  உன் (மண்) வாசம்,
சில்லென்று சிலிர்கிறது - மனம்
உன் பரிசம்பட்டு.
கோடை மழை..!

Sunday, 29 March 2020

ஒற்றை சிறகின் பயனம்


"ஒற்றை சிறகின் பயனம்"
தான் அழுகின்ற
போது அவ்-அழுகையை
நிறுத்தி சிரிக்க வைக்க
ஒருவரால் முடியுமென்றால்
அது உண்மையாய் - தம்மை நேசிப்பவர்களால்
மட்டுமே சாத்தியமாகும்..!
அதை விடுத்து
தன் கண்ணீரை வேஷம்
என இகழ்ந்தோர் மத்தியில்
தன் வேஷம்மெனும் புன்னகையில்
காற்றின் திசைதனில் வையத்து வலம் வரும் ஓர் நிச்சயமற்ற பயணமிது ஒற்றை சிறகின் பயனம்!

Saturday, 25 January 2020

பிரிவு..

தொலைவில் இருந்தாலும் மனதில்
நீ தான் இருக்கிறாய்..
தொந்தரவு செய்யவில்லை-ஆனால்
மனம் உன்னை நீங்கி இருக்கவில்லை..
காலம் பாராமல்  கொஞ்சிப்பேசிட
மனதிற்கு பிடித்த உறவே நீ இல்லை..
மனம் மயங்கும் மகிழ்ச்சியில் உரையாடி -மகிழ்ந்திட
நீ இன்றி சிறு தேநீர் நேரமும் சிறக்கவில்லை..
கூடி அமர்ந்து உணவருந்தும்
நெகிழ்ச்சியும் இல்லை..
உறக்கம் இல்லா கண்களில்
உறைந்தது கிடக்கும் உன் உருவம்..
உயிர்ப்போடு இருக்க
உன் ஆறுதல் நிறைந்த வார்த்தைகள்
மட்டுமே போதும்.
கண்ணீர் தவழும் தருணங்கள் எல்லாம்
உன் குரல் கேட்க ஏங்கும் என் மனதுக்கு..
புரிய வைக்க முடியவில்லை
கற்பனைகள் யாவும் கானல்நீராய்
போனதென்ற எதார்த்தங்களை..
தவிப்புடனும் தனிமையுடனும் நகர்கிறது
நிஜம் புரிந்தும் என் நிகழ்கால நாட்கள்...!!!

Wednesday, 1 January 2020

புத்தாண்டு

புதிது புதிதாய் பிறக்குது
புதுமைகள் பலவும் புரியுது...
புரிந்தும் புரியாத
பல விந்தைகளும்
தெரிந்தும் தெரியாத
சில கேள்விகளும்...
களைந்து போன பல -கனவுகளும்..
"கனக்கும் மனதிற்குள்"
நிறைந்து மறைந்த
நெகிழ்ச்சியூட்டட்டும்  கடந்த ஆண்டின்
என்றும்  நீங்கா சில - நினைவுகளுடன்...
சுமையோ...சுகமோ... இவ்வாண்டில்
எதிர்வரும் நாட்களை கடந்து பயணிக்க... 🚶‍♂️
இனிய ஆங்கில புத்தாண்டு
வாழ்த்துக்கள்!