தொலைவில் இருந்தாலும் மனதில்
நீ தான் இருக்கிறாய்..
தொந்தரவு செய்யவில்லை-ஆனால்
மனம் உன்னை நீங்கி இருக்கவில்லை..
காலம் பாராமல் கொஞ்சிப்பேசிட
மனதிற்கு பிடித்த உறவே நீ இல்லை..
மனம் மயங்கும் மகிழ்ச்சியில் உரையாடி -மகிழ்ந்திட
நீ இன்றி சிறு தேநீர் நேரமும் சிறக்கவில்லை..
கூடி அமர்ந்து உணவருந்தும்
நெகிழ்ச்சியும் இல்லை..
உறக்கம் இல்லா கண்களில்
உறைந்தது கிடக்கும் உன் உருவம்..
உயிர்ப்போடு இருக்க
உன் ஆறுதல் நிறைந்த வார்த்தைகள்
மட்டுமே போதும்.
கண்ணீர் தவழும் தருணங்கள் எல்லாம்
உன் குரல் கேட்க ஏங்கும் என் மனதுக்கு..
புரிய வைக்க முடியவில்லை
கற்பனைகள் யாவும் கானல்நீராய்
போனதென்ற எதார்த்தங்களை..
தவிப்புடனும் தனிமையுடனும் நகர்கிறது
நிஜம் புரிந்தும் என் நிகழ்கால நாட்கள்...!!!
நீ தான் இருக்கிறாய்..
தொந்தரவு செய்யவில்லை-ஆனால்
மனம் உன்னை நீங்கி இருக்கவில்லை..
காலம் பாராமல் கொஞ்சிப்பேசிட
மனதிற்கு பிடித்த உறவே நீ இல்லை..
மனம் மயங்கும் மகிழ்ச்சியில் உரையாடி -மகிழ்ந்திட
நீ இன்றி சிறு தேநீர் நேரமும் சிறக்கவில்லை..
கூடி அமர்ந்து உணவருந்தும்
நெகிழ்ச்சியும் இல்லை..
உறக்கம் இல்லா கண்களில்
உறைந்தது கிடக்கும் உன் உருவம்..
உயிர்ப்போடு இருக்க
உன் ஆறுதல் நிறைந்த வார்த்தைகள்
மட்டுமே போதும்.
கண்ணீர் தவழும் தருணங்கள் எல்லாம்
உன் குரல் கேட்க ஏங்கும் என் மனதுக்கு..
புரிய வைக்க முடியவில்லை
கற்பனைகள் யாவும் கானல்நீராய்
போனதென்ற எதார்த்தங்களை..
தவிப்புடனும் தனிமையுடனும் நகர்கிறது
நிஜம் புரிந்தும் என் நிகழ்கால நாட்கள்...!!!