Wednesday, 29 April 2020

வா மழையே வா

வா மழையே வா
        வா மழையே வா

           " செடி கொடிகள் பசியாற "

                   வா மழையே வா
                           வா மழையே வா...

                              🌧🌧🌱🌧🌧

Sunday, 26 April 2020

மழைச்சாரல்

உன் வெள்ளி பரிசம் பட்டு
சில்லென்று சிலிர்கிறது தேகம்
சிறகடித்து பறக்கிறது
பட்டாம்பூச்சியாய் உள்ளம்
நிரைதேடி ஓடும் வேரைப்போல
மண்ணை தேடிய மழைச்சாரல்!!!.

Saturday, 25 April 2020

மழை

அந்தி கருத்துருச்சி  🌫
மழைக்காற்று ஆர்பாட்டம் ஆக்கிடுச்சி 🌬
ஆகாசம் அழுதுருச்சி  ⛈
வறண்ட பூமி குளிர்ந்திருச்சி  🌱
இந்த பாவி மரங்கள் மகிழ்ந்திருச்சி 🌳
புன்னகையில் பூத்துருச்சி 🌷
பூகோளம் ஆக்கிடுச்சி.! 🏝🌏🏞
( 🌧 கோடை மழை 🌧 )

Thursday, 9 April 2020

கோடை மழை..

கார் முகில் கூட,
இளந்தென்றல் விச,
மனமெங்கும் உன் ஞாபகம்,
ஊரெங்கும்  உன் (மண்) வாசம்,
சில்லென்று சிலிர்கிறது - மனம்
உன் பரிசம்பட்டு.
கோடை மழை..!