யாரோவாகி போனேனோ
கண்ணெதிரே கண்டபோதும்
கரையமல் சென்றாயோ
எதிர்பாரா சந்திப்பும் ஏமாற்றம் ஆனதோ
பாதையோர பயணியென பாராமல் போனாயோ...
கனபொழுதில் கண்மறைந்த காவியமே
பேசத்தான் என்னிடத்தில் வார்த்தையிலை
எல்லாமே வெறுமையாய் நான் நிற்கையிலே..!
என் அழகியே, உன்னை வர்ணிக்க சங்கத்தமிழ் நீந்தியும் சொற்கள் பிறக்கவில்லை.. ♥ சிறு கவிதையில் அடங்கி விடாத உன் பேரழகை சங்கத்தமிழ் கொண்டு வர்ணிப்பது எளிதல்ல என் காதல் கண்மணியே!!!♥ இருபினும் என் கற்பனையில் சிதறும் சிறு சொற்கள் கொண்டு கவிபாடுகிறேன் என் தேவதையே!!!.