Tuesday, 17 September 2019

தனிமை


"அழும்போது தனிமையில் அழு..😥
சிரிக்கும்போது நண்பர்களுடன் சிரி..😆
தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்..
கூட்டத்தில்  அழுதால் நடிப்பு என்பார்கள்...!"

Sunday, 8 September 2019

பயணம்..

💃என்னவளுடன் பயணத்தில்
பாதைகள் மறந்தன...
அப் - பயணங்களை புதுப்பிக்கும் 
பல நினைவலைகளை சேர்ததால்..!

தனிமையின் பயணம் தொடர்ந்தது
நினைவுகள் சேரவில்லை...
மாறாக - பாதைகள் மட்டும் பழகிப்போனது..!

"தனிமையின் பயணம்
                           வெறுமையின் உச்சம்!!"

மனதின் - மாயக்கண்ணாடி 👓

"முகம் காட்டும் கண்ணாடியை போல
மனதை காட்டும் 👓 மாயக்கண்ணாடி இருந்தால்..
மாயமான பாசங்களும் 
மறுமை பெறும்.. 😉
காயப்பட்ட நினைவுகளும்
பசுமை பெறும்.. 🌾
சாயம் போன எம் கனவுகளும்
முழுமை பெறும்..🌚! "
              ♥️

Tuesday, 3 September 2019

நான்

கற்பனைக்கு எட்டா கவிதையாய்
வாசிப்பவர்களின் மனதிலும்
விமர்சிப்பவர்களின் கையிலும் - நான் (புத்தகம்)📖..!

பயணம்

பயணம்...🏄‍♂️⛵

 பாதை ஒன்று,  பயணங்கள் பல..
பாதைகள் எதுவானாலும் பயணங்கள் முடிவதில்லை  - ஓடம்
கரையையும் கடப்பதில்லை..!🏄‍♂️🏊‍♂️🚣‍♂️